கோவை: கோவையில் ஈஷா அவுட்ரீச் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் மத்திபாளையத்தில் வரும் 22-ம் தேதி நடைபெற இருக்கிறது.

ஈஷா அவுட்ரீச் கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், தென்கரை மக்கள் பொதுநல சங்கம், லெவன் ஸ்டார்ஸ் கிரிக்கெட் அணி நண்பர்கள் நற்பணி மன்றம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண்சிகிச்சை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திபாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வரும் 22-ம் தேதி (ஞாயிறு) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் கண்புரை, மாறுகண், நீர்அழுத்தநோய், மாலைக்கண், சீழ் மற்றும் நீர்வடிதல், தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்ற பிரச்சனைகளுக்கு இலவச பரிசோதனை செய்யப்படும். பரிசோதனைக்குப் பிறகு கண்புரை நோயாளிகள் கோவை அரவிந்த் கண்மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படுவார்கள். இவர்களுக்கு I.O.I.லென்ஸ், சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற பார்வைக்கோளாறு இருப்பவர்களுக்கு மிகக்குறைந்த விலையில் தரமான கண்கண்ணாடிகள் வழங்கப்படும்.
முகாமிற்கு வருபவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டையின் நகல் எடுத்து வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு: 9442590058.