கோவை: போத்தனூர்-செட்டிபாளையம் சாலை உழவன் நகர் பகுதியில் புதிதாக தொடங்க உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மதுபான கடை அமைய உள்ள இடத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "குடியிருப்பு அதிகம் உள்ள இப்பகுதியில் மதுக்கடை அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் முதல் முதலமைச்சரின் தனி பிரிவு வரை மனு அளித்தோம். இங்கு கடை அமையாது என அதிகாரிகள் உறுதி அளித்த நிலையில், தற்போது கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதைக் கண்டித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்." என்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வள்ளி என்ற பெண் கூறுகையில், "இப்பகுதியில் வசிக்கின்றனவர்களின் குழந்தைகள் இந்த மதுபான கடையை தாண்டி தான் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும்.
மதுபான கடைக்கு மாற்றாக மக்களின் அத்தியாவசியமான ரேசன் கடையோ, சுகாதார அலுவலகம் அமைக்கலாம். மதுபான கடை இங்கு அமைவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்." என்றார்.