2017-2018 நிதியாண்டில் சரக்கு வருவாய் ரூ.66.9 கோடி : தெற்கு ரயில்வே

சேலம்: 2017-18 ஆம் ஆண்டு நிதியாண்டில் சரக்கு வருவாய் ரூ.66.9 கோடி எட்டப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.

சேலம்: 2017-18 ஆம் ஆண்டு நிதியாண்டில் சரக்கு வருவாய் ரூ.66.9 கோடி எட்டப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது. 

தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் சரக்கு மற்றும் பார்சல் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சேலம் கோட்ட அலுவலகத்தில் இன்று (ஜூலை 19) நடைபெற்றது. இதற்கு சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் தலைமை வகித்தார். சேலம் கோட்ட வணிக பிரிவு முதுநிலை மேலாளர் ஏ.விஜுவின் வாடிக்கையாளர்களை வரவேற்றுப் பேசினார்.

பி.பி.சி.எல்., இந்திய உணவுக்கழகம், ஜிண்டால் ஸ்டீல் நிறுவனம், செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம், எஸ்.கே.எம்., தீவனம் நிறுவனம், சாந்தி தீவனம் நிறுவனம் மற்றும் பார்சல் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் பேசுகையில், ”சேலம் ரயில்வே கோட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டு நிதியாண்டில் சரக்கு வருவாய் ரூ.66.9 கோடி எட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 13.89 சதவீதம் ஆகும். அதாவது, முந்தைய ஆண்டில் சரக்கு வருவாய் ரூ.58.7 கோடியாக இருந்தது," என்றார். 

ரயில்வே துறையின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், தற்போதைய திட்டங்கள் குறித்தும் வாடிக்கையாளர்களுடன் விவாதிக்கப்பட்டது. வாடிக்கையாளரின் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், சரக்கு சேவையை அதிகப்படுத்த வாடிக்கையாளர்களுக்கு அனைத்துவித உதவிகளும் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...