திருப்பூர்: திருப்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவர் என்பதால் பாப்பாள் என்ற சமையலரை மாணவ மாணவிகளுக்கு சமையல் செய்யக்கூடாது என்று கூறி பள்ளியை திறக்க விடாமல் உள்ளூரை சேர்ந்த ஒரு சாதியினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த திருமலைக் கவுண்டன்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 75 மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர்.

இப்பள்ளியின் சமையலராக அதே பகுதியை சேர்ந்த அருந்ததியர் சமூகத்தை சார்ந்த பாப்பாள் (42) என்பவர் பணியிட மாற்றத்தால் கடந்த திங்கட்கிழமையன்று (16.08.2018) பணிக்கு சேர்ந்தார். இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் சமையல் செய்தால் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று சொல்லி கடந்த இரண்டு நாட்களாக வேறு சமையலர்களை வைத்து மாணவ மாணவிகளுக்கு சத்துணவு சமைத்து போட்டுள்ளனர்.

உள்ளூர் ஆதிக்க சாதியினரின் மிரட்டலுக்கு அடிபணிந்த அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி சமையலர் பாப்பாளை வேறு ஊருக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும், அந்த உத்தரவை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று வாங்கிக்கொள்ளுமாறும் பாப்பாளை மேலதிகாரிகள் கூறியுள்ளனர்.
சாதி வெறி
அந்த உத்தரவை வாங்க மறுத்த பாப்பாள், அதே பள்ளியில்தான் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று கூறிவருகிறார். இதையடுத்து நேற்று காலை பாப்பாள் சமையலராக இருக்கக் கூடாது என்று கூறி உள்ளூரை சேர்ந்த ஆதிக்க சாதியினர் பள்ளியை திறக்கவிடாமல் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் சித்ரா மற்றும் ஊரக கல்வி அலுவலர் ஜஸ்டின்ராஜ் ஆகியோர் நேரில் வந்த பேச்சுவார்த்தை நடத்தி சுமார் இரண்டு மணிநேரம் கால தாமதமாக 11.30 மணியளவில் பள்ளியை திறந்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே பாப்பாளை சாதிப் பெயரை சொல்லியும், தகாத வார்த்தைகளாலும் பேசி அராஜகத்தில் ஈடுபட்டனர் அந்த சாதி வெறியர்கள்.

நேற்றும் வேறு சமையலர்களை வைத்தே பள்ளியில் சத்துணவு சமைக்கப்பட்டது. இதையடுத்து உள்ளூர் ஆதிக்க சாதியினர் கலைந்து சென்றனர். இருந்தபோதிலும் தனது பணியிட மாற்ற உத்தரவை பெறப்போவதில்லை என்றும் திருமலைக் கவுண்டன்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியிலேயே பணியமர்த்தும் வரை தொடர்ந்து போராடப்போவதாகவும் பாப்பாள் கூறிவருகிறார்.
இதனால் அப்பகுதியில் சாதிக்கலவரம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தீண்டாமை கொடுமை காரணமாக பள்ளியில் ஒரு பெண் சமையலராக பணியாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது சமூக நீதிக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையாக இருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.