சிங்கப்பூர் பயணத்துறை சார்பில் கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 'ரோட் ஷோ'

கோவை: இந்திய சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிங்கப்பூர் பயணத்துறை சார்பில் கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 26-ம் தேதி வரை 'ரோட் ஷோ'விற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை: இந்திய சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிங்கப்பூர் பயணத்துறை சார்பில் கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 26-ம் தேதி வரை 'ரோட் ஷோ'விற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 6 லட்சம் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். இது கடந்த 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 17 சதவீதம் அதிகமாகும். கப்பல் மூலமாக சிங்கப்பூருக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையிலும் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 27 ஆயிரம் பயணிகள் கப்பல் மூலம் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது இது 25 சதவீதம் அதிகமாகும்.

2018-ம் ஆண்டில் இந்திய சுற்றுலா பயணிகளை வரவேற்க, சிங்கப்பூர் பயணத்துறை பல்வேறு முன் முயற்சிகளை எடுக்கவுள்ளது. ஜூலை 16 முதல் 26-ம் தேதி வரை இந்தியாவின் 8 முன்னணி நகரங்களில் சாலைநிகழ்ச்சிகளை (ரோட் ஷோ) நடத்தவுள்ளது. டிராவல் ஏஜெண்டுகள் உட்பட சிங்கப்பூர் பயணத்துறையின் சுமார் 40 பங்குதாரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். கோவை, திருச்சி, லூதியானா, கொச்சி, கொல்கத்தா, சூரத், வைசாக், லக்னோ ஆகியவை இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ள 8 நகரங்களாகும். ‘ஆர்வத்துடன் புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம்’ என்ற கருத்தில் நடத்தப்படும் இந்த ரோட் ஷோக்களில் டிராவல் ஏஜென்சிகள் மூலம் வழங்கப்படும் புதிய சலுகைகள், பயணிகளை ஈர்க்கும் விஷயங்களைப் பற்றி சிங்கப்பூர் பயணத்துறை விளக்கிக் கூறவுள்ளது. 

சிங்கப்பூர் பயணத்துறையின் பிரதிநிதிகள் குழுவின் பிராந்திய இயக்குநர் ஜி.பி.ஸ்ரீதர் கூறுகையில், "சிங்கப்பூர் சுற்றுலாவுக்கு இந்தியா மிகப்பெரிய மூலச் சந்தையாக விளங்குகிறது. பல்வேறு வர்த்தக முன்முயற்சிகள் மற்றும் பங்குதாரர்கள் மூலம் பயணிகளை ஈர்ப்பதில் சிங்கப்பூர் பயணத்துறை மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 6.1 இந்தியப் பயணிகளை வரவேற்றதை நினைத்துப் பெருமைப்படுகிறோம்,” என்றார் 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...