திருப்பூர்: தடை செய்யப்பட்ட ஒன்றரை டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்: தடை செய்யப்பட்ட ஒன்றரை டன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துணை சட்ட விதிகளின் கீழ் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலிதீன் பைகள், டம்ளர், விரிப்புகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தப்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பி.என்.ரோட்டில் உள்ள மொத்த வியாபார மளிகைக் கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடையில் இருந்து சுமார் ஒரு டன் பிளாஸ்டிகள் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனர். இதேபோல், மற்றொரு கடையிலும் 1/2 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.