கோவை: உக்கடம் மொத்தம் மீன் மார்க்கெட்டிற்கு இன்று மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால் சில்லரை விற்பனையில் மீன்களின் விலை சரிவை சந்துள்ளது.

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு கன்னியாகுமரி, கேரள அரபிக்கடல் பகுதிகள், நாகப்பட்டினம், சென்னை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் வருகின்றன.
இதனை உக்கடம் சில்லரை மீன் மார்க்கெட் பகுதியிலுள்ள 48 கடை வியாபாரிகளும் எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர். அதுபோக. மாவட்டம் முழுவதும் சில்லரை விற்பனையாளர்கள் எடுத்து சென்று பல்வேறு பகுதிகளில் வியாபாரம் செய்கின்றனர்.
இதனிடையே கடந்த சில தினங்களாக கன்னியாகுமரி மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் புயல் சீற்றம் காரணமாக மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு மீன் வரத்து குறைந்தது.
கடல் சீற்றம் குறைந்ததை அடுத்து உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு மீன்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மீன்களின் விலை சரிவடைந்துள்ளது.
விற்பனை
உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு சுமாராக நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 டன் வரை மீன்கள் வருகின்றன. இதில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 70 முதல் 80 டன் வரை மீன்கள் வருகின்றன. கடல் சீற்றம் காரணமாக 10 டன் வரை மட்டுமே மீன்கள் வந்த நிலையில் இன்று மீண்டும் 30 டன்கள் மீன்கள் வரத்தொடங்கின.
இதனால் கிலோ ரூ.1100-க்கு விற்பனையான வஞ்சரம் மீன் இன்று ரூ.650-க்கு விற்பனையாகிறது. மேலும், ரூ.220-க்கு விற்பனையான அயிலை மீன் ரூ.180-க்கும், ரூ.400--க்கு விற்பனையான பாறை மீன் ரூ.350-க்கும், ரூ. 250-க்கு விற்பனையான சங்கரா மீன் ரூ.170-க்கும், ரூ.400-க்கு விற்பனையான மீன் ரூ.300-க்கும், ரூ.400-க்கு விற்பனையான ஊழி மீன் ரூ.300-க்கும், ரூ.150-க்கு விற்பனையான மத்தி மீன் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
மீன்களில் பார்மலின் ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன என்கிற வதந்தி காரணமாக சென்னையில் மீன்களின் விலை கடும் விலை சரிவை சந்தித்த நிலையில், கோவையில் வரத்து அதிகம் காரணமாகவே விலை சரிவு சந்துள்ளது என்று வியாபாரிகள் கூறினார்.
இது குறித்து உக்கடம் மீன் மார்க்கெட் தலைவர் H.S. பாவா கூறுகையில், "கோவையில் வழக்கம் போல் மீன் வியாபாரம் நடைபெறுகிறது. அதிகாரிகள் நடத்திய சோதனையில் இங்கு உள்ள மீன்களின் எந்த ரசாயனமும் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட வழக்கம் போல் வியாபாரம் நடைபெற்றது. வரத்து அதிகம் காரணமாக தான் மீன்கள் விலை குறைந்துள்ளது," என்றார்.