பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனதளவில் சிரமப்பட்டேன்: கோவையில் ஆனந்த வைத்தியநாதன் பேட்டி

கோவை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உடல் அளவிலும், மனதளவிலும் சிரமப்பட்டதாக ஆனந்த வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

கோவை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உடல் அளவிலும், மனதளவிலும் சிரமப்பட்டதாக ஆனந்த வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன் (26). தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், உலக அமைதியை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காஷ்மீர் வரை உலக சமாதானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பயணத்தை கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கினார்.

தனது இருபது நாள் பயணத்தில் கார்கில் வரை சென்று, மீண்டும் கன்னியாகுமரி சென்ற அவர் இன்று கோவை திரும்பினார். அப்போது அவரும், 'பிக்பாஸ்' புகழ் அனந்த வைத்தியநாதனும் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.



அப்போது, அனந்த வைத்தியநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிக்பாஸ் நிகழ்ச்சியை வெளியே இருந்து பார்ப்பதற்கும், வீட்டிற்கு உள்ளே நடக்கும் அனுபவங்களும் வேறுவேறு. பிக்பாஸ் வீட்டில் மூன்று வாரமாக உடல் அளவிலும், மன அளவிலும் அதிக அளவில் சிரமப்பட்டேன்.

அந்த நிகழ்ச்சியில் கலாச்சார சீரழிவு இருந்தால் யாரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டாம். முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் வெற்றி அடையவில்லை. அதற்கு இன்னும் அதிக அளவு காலம் உள்ளது. இரண்டாம் பாகத்தில் அதிகளவில் டிராமா உள்ளது. அந்த நிகழ்ச்சி முன்னமே சித்தரிக்கப்பட்டது என்று பரவலாக பேசப்படுவதாக நானும் கேள்விப்பட்டேன்." என்றார்.

நடிகர் கமலஹாசன் இரண்டாம் பாகத்தில் அரசியல் புகுத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "இந்த கேள்விக்கான பதிலுக்கு எனக்கு விடை தெரியாது." என்றார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...