யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு விவகாரம் : சி.ஏ.ஜி.,யை தொடர்ந்து அறிக்கையைத் தாக்கல் செய்தது ஈஷா

கோவை: யானை வழித்தடங்களை மறித்து கட்டிடங்கள் கட்டியதாக இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் குற்றம்சாட்டிற்கு கோவை ஈஷா யோகா மையம் விளக்கம் அளித்துள்ளது.


கோவை: யானை வழித்தடங்களை மறித்து கட்டிடங்கள் கட்டியதாக இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் குற்றம்சாட்டிற்கு கோவை ஈஷா யோகா மையம் விளக்கம் அளித்துள்ளது. 

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஜக்கி வாசுதேவ், ஈஷா யோகா மையம் நடத்தி வருகிறார். கடந்த திங்கள்கிழமை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை சமர்பித்தார். அதில், மலைப்பகுதிகளைப் பாதுகாக்கும் ஆணையத்திடம் (எச்.ஏ.சி.ஏ.,) இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறாமல் ஈஷா யோகா மையம் கட்டிடங்களை கட்டியதாகக் கூறப்பட்டிருந்தது.

மேலும், 2012 ஆம் ஆண்டில் வனப்பகுதியில் சட்டவிரோதமாக கட்டிடம் கட்டுவதைத் தடுக்க வனத்துறை தவறிவிட்டது. 2012 பிப்ரவரி மாதம் மாவட்ட களஅலுவலர் ஆக்கிரமிப்பு முயற்சிகளைக் கண்டறிந்தும், அதனை தடுக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதோடு, இதற்கு அடுத்த ஆண்டே தடையில்லா சான்று வழங்கவும் வனத்துறை மறுத்துள்ளது. எனினும், வனப் பகுதிகளை ஆக்கிரமித்து நடந்த கட்டுமானப் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறியிருந்தது. 

இதனிடையே, மலைப்பகுதிகளைப் பாதுகாக்கும் ஆணையத்தின் விதிகளை மீறி, 100 மீட்டர் தொலைவிற்கு வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா யோகா மையத்தின் மீது வழக்கும் தொடரப்பட்டது. மேலும், வனத்துறையினரின் அனுமதி வாங்காமல், தாசில்தார், வருவாய்துறையினரின் தடையில்லா சான்றிதழ்களை மட்டுமே பெற்று மலைப்பகுதிகளை பாதுகாக்கும் ஆணையத்தின் அனுமதிக்காகக் கோரப்பட்டதாகவும் ஈஷா யோகா மையத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாயத்து அளவில் அனுமதியை மட்டும் பெற்று உருவாக்கப்பட்ட ஈஷா யோகா மையம் தற்போது, மதத்தின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஈஷா யோகா மையம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், * ஈஷா யோக மையம் வனத்தையோ அல்லது பழங்குடியின மக்களின் நிலத்தையோ ஆக்கிரமிப்பு செய்யவில்லை. ஈஷா யோக மையம் வன நிலத்தில் கட்டப்படவில்லை. ஈஷா யோக மையத்திற்கு சொந்தமான பட்டா நிலத்தில் மட்டுமே மையம் கட்டப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு, தமிழக வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இதனை சரிபார்த்தபின், ஈஷா மையம் முழுக்க முழுக்க பட்டா நிலத்தில் மட்டுமே அமைந்துள்ளது. வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்பதை தெள்ளத் தெளிவாக பதிவு செய்துள்ளனர். 

 

தமிழக வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள், ஈஷா யோக மையத்தின் கட்டிடங்கள் யானை வழித்தடங்களில் அமையவில்லை என்பதை சரிபார்த்து உறுதிப்படுத்தியுள்ளனர். இதனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி (RTI) அனைவரும் தெரிந்துகொள்ளலாம். மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகமும், இந்திய வனவிலங்கு அறக்கட்டளையும், இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியமும், யானைகள் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் பல்வேறு விஞ்ஞானிகளும், ஈஷா மையம், யானை வழித்தடங்களுக்கு அருகில்கூட இல்லை என்பதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஈஷா அறக்கட்டளை எழுப்பியுள்ள அத்தனை கட்டிடங்களுக்கும், ஜூலை 2017-ஆம் ஆண்டிற்கு முன்பு, 58-வது இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் சந்திப்பில், மலைத்தள பாதுகாப்பு குழுமம் அனுமதி வழங்கி ஒப்புதல் அளித்துள்ளது என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் தடையின்மைச் சான்றிதழை வழங்கிய பின்னரே ஹெச்ஏசிஏ தன் ஒப்புதலை வழங்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...