கோவை: டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ., கைவிட்டது தொடர்பான விசாரணையை ஜூலை 19-ம் தேதி ஒத்திவைத்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 18-ல், முகாம் அலுவலகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த சி.பி.ஐ., தற்கொலைக்குக் காரணமாக குற்றவாளிகள் யாரும் இல்லை என்றும், இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, சி.பி.ஐ., முழுமையான தகவலை தரவில்லை எனவும், அவர் இறப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை விவரங்கள், தற்கொலை செய்த போது எழுதிய கடிதம் என அனைத்து தகவல்களும் ஆர்.டி.ஐ., மூலம் கேட்டுள்ளதாகவும், அந்த தகவல்கள் கிடைத்தவுடன் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்குமாறும் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, இவ்வழக்கு விசாரணையை வருகின்ற ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.