கோவை: கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த உசேன் பீவி என்பவரது வங்கி கணக்கில் இருந்து போலி ஏ.டி.எம்., கார்டைப் பயன்படுத்தி ரூ. 4,31,000 மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் உசேன் பீவி. இவரது, கணவர் மாநகராட்சிப் பணியாளராக இருந்து மரணமடைந்தார். இதையடுத்து, கடந்த 38 வருடங்களாக உசேன் பீவி ஓய்வு ஊதியத்தை கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள தலைமை இந்தியன் வங்கியில் இருந்து பெற்று வருகிறார். கடந்த மாதம் தனது ஓய்வூதியத்தை எடுக்க வங்கிக்கு சென்ற போது, ஏற்கனவே அவரது ஓய்வூதிய பணம் எடுத்துவிட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த அவர், தனது வங்கி கணக்கை சோதித்த போது, ரூ. 50,000 வங்கியில் இருந்தும், ரூ. 4,31,000 ஏ.டி.எம். மூலமாகவும் எடுக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து, வங்கி மேலாளர் உசேன் பீவியின் வங்கி கணக்கை சோதித்த போது, அவரது வங்கி கணக்கிற்கு நஜ்மா பேகம் என்பவருக்கு ஏ.டி.எம் கார்டு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. தனது வங்கி கணக்கிற்கு மோசடியாக வேறு ஒருவர் ஏ.டி.எம்.,கார்டு பெற்றது தொடர்பாக உசேன் பீவி தனது மகனுடன் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், கடந்த ஏப்ரல் மாதம் லைப் சான்றிதழ் பெறுவதற்காக வங்கிப் புத்தகத்தை கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள தகவல் மையம் அருகே விண்ணப்பம் பூர்த்தி செய்யும் நபரிடம் கொடுத்ததாகவும், அவரிடம் இரண்டு நாட்கள் வங்கிப் புத்தகம் இருந்ததாகவும் குறிப்பட்டுள்ளனர்.
இது குறித்து மகன் அப்துல் ஹக்கீம் கூறியதாவது :- வங்கிக் கணக்கில் இருந்த பணம் மாயமானது தொடர்பாக வங்கி அதிகாரிகள் உரிய பதில் தர மறுக்கின்றனர். ஒருவரது வங்கி கணக்கிற்கு வேறு ஒருவருக்கு ஏ.டி.எம் எப்படி வழங்கப்பட்டது. தற்போது, ஏ.டி.எம். விவரம் குறித்தும் வங்கி அதிகாரிகளிடம் கேட்டால் முன்னுக்குபின் முரணாக பதில் அளிக்கின்றனர். எனவே, இந்த மோசடி தொடர்பாக போலீசார் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.