கோவை: இயற்கைக்காகவும், விவசாயிகளுக்காகவும் போராடுபவர்களை மாவோயிஸ்ட்கள் அல்லது நக்சலைட்டுகள் எனக் கூறுவதா..? என தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை: இயற்கைக்காகவும், விவசாயிகளுக்காகவும் போராடுபவர்களை மாவோயிஸ்ட்கள் அல்லது நக்சலைட்டுகள் எனக் கூறுவதா..? என தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை பிரஸ் கிளப்பில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷின் சகோதரி ஊர்வசி் லுனியா செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில், சகோதரி ஊர்வசி லுனியா பேசியதாவது :- நேற்று முன்தினம் பியூஸ்மனுஷ் கைது செய்யப்பட்டது குறித்து காவல்துறை முறையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. பியூஸ்மனுஷை கடத்தி சென்றது போல போலீசார் அவரை அழைத்து சென்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பின்னர் வழக்கறிஞர்கள் அவரை சந்திக்க போலீசார் அனுமதிக்கவில்லை. பியூஸ் மனுஷ் செல்போனை போலீசார் வைத்துள்ளனர். செல்போனை தங்களிடம் போலீசார் கொடுக்க மாட்டேன் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சேலம் - சென்னை சாலை குறித்து தனது கருத்தை பியூஸ் சொல்கிறார். அவர் மக்களைத் தூண்டிவிடவில்லை. தண்ணீர், நிலம், சுத்தமான காற்றுக்காகவும், விவசாயிகளுக்கும் போராடினால், குரல் கொடுத்தால் மாவோயிஸ்ட், நக்சல் என அரசு சொல்லுமா..?. 8 வழிச்சாலை குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. இதைக் கேள்வி எழுப்பினால் பியூஸ் மனுஷ் கைது செய்யப்படுகின்றார். பியூஸ் மனுஷ் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முயலுகின்றனர். அதிகாரத்தில் இருப்பவர்களைப் பாதுகாப்பது மட்டும் போலீசாரின் பணியா..?
மக்களுக்கு அவர்களின் உரிமைகளை சொல்லிக்கொடுப்பது, அறியாமையைப் போக்குவது போன்றவை போராட்டத்தை தூண்டும் செயலா..? பியூஸ் மனுஷ் கைது சம்பவத்தில் அரசு மற்றும் காவல்துறை இரண்டுமே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றன. உண்மையை அரசுக்கு எடுத்து உணர்த்தினால் கைது செய்வது என்பது சரியான நடவடிக்கை அல்ல. தமிழகம் தழுவிய அளவில் அனைத்துச் சுற்றுச்சுழல் ஆர்வலர்களையும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த உள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.