திருப்பூர் சார் ஆட்சியரைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்

திருப்பூர்: திருப்பூர் சார் ஆட்சியரைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் சார் ஆட்சியரைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் சார் ஆட்சியராக ஷ்ரவண்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், அரசு ஊழியர்களிடம் விரோத போக்கினை கடைபிடிப்பதாகவும், ஊழியர்களை தேவையில்லாமல் பணி இடம் மாற்றம் செய்வதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், சார் ஆட்சியரைக் கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக சார் ஆட்சியரால் வழங்கப்பட்ட பணியிடை மாற்றத்தை ரத்து செய்ய கோரி திருப்பூர் குமரன் சிலை முன் , தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  போலீசாரின் தடையை மீறி நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சார் ஆட்சியருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....