ஈரோடு: அரசு பேருந்தில் இந்தி எழுத்துக்கள் இருந்தது தொடர்பாக ஈரோடு நகரப் பேருந்தின் நடத்துனர் ஸ்ரீனிவாசன் ஒருநாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஈரோடு: அரசு பேருந்தில் இந்தி எழுத்துக்கள் இருந்தது தொடர்பாக ஈரோடு நகரப் பேருந்தின் நடத்துனர் ஸ்ரீனிவாசன் ஒருநாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பெருந்துறையில் இருந்து சிப்காட் வழியாக கவுந்தப்பாடி செல்லும் அரசு பேருந்தில் இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டு இருப்பது சமூகவலை தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, அதிகாரிகளிடம் எந்தவொரு அனுமதியும் வாங்காமல் எழுதப்பட்ட இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபாகர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அதன்படி, பேருந்தின் நடத்துனர் ஸ்ரீனிவாசனை ஒருநாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து கவிந்தப்பாடி பணிமனையில் கேட்ட போது, "வாரம் ஒரு முறை மட்டுமே இந்த இந்தி எழுத்துக்கள் இருக்கின்றன. பெருந்துறை சிப்காட் பகுதியில் அதிகப்படியாக உள்ள வட மாநிலத்தவர்கள், அங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் சந்தைக்கு செல்லுவதற்கு வசதியாக எழுதப்பட்டுள்ளது. இனிமேல் இந்தி எழுத்துக்கள் இருக்காது," என்றனர்.