மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 20 மொழிகளில் நடத்த சி.பி.எஸ்.இ.,க்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப, உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தத் தேர்வுகள் 20 மொழிகளில் எழுதும் வசதி இருந்து வந்தது. ஆனால், அண்மையில், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் மொழிகளைத் தவிர பிற மொழிகள் பட்டியில் இருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இத்தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்தார். தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.