திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் - பல்லடம் சாலை நொச்சிப்பாளையம் பிரிவு பேருந்து நிறுத்தம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகம் வந்து செல்லும் இடமாகும். அந்த பகுதியில் குடியிருப்புகளும் அதிகளவில் உள்ளது.
இப்பகுதியில் ஏற்கனவே டாஸ்மாக் கடை உள்ள நிலையில் கூடுதலாக டாஸ்மாக் கடையை திறக்க உள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கூடுதலாக மதுக்கடை திறந்தால் பாதுகாப்பு தன்மையற்ற சூழல் உருவாகும் என்றும் குடிமகன்களால் அதிகளவில் தொந்தரவு ஏற்படும் என்றும், ஆகவே மதுக்கடை அமைக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.