கோவையில் பிரபலமாகும் 'கீரைக்கடை.காம்' : அனைத்துப் பகுதிகளிலும் மினி ஸ்டோர் தொடக்கம்

கோவை: பொறியியல் பட்டதாரிகளால் ஆன்லைன் வர்த்தகமாகத் தொடங்கப்பட்ட 'கீரைக்கடை.காம்'மின் (Keeraikadai.com), புதிய முயற்சியாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மினி ஸ்டோர் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை: பொறியியல் பட்டதாரிகளால் ஆன்லைன் வர்த்தகமாகத் தொடங்கப்பட்ட 'கீரைக்கடை.காம்'மின் (Keeraikadai.com), புதிய முயற்சியாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மினி ஸ்டோர் தொடங்கப்பட்டுள்ளது. 



கடந்த 2017 ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட 'கீரைக்கடை.காம்' கோவை நகரில் 40 வகையான கீரைகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீராம் பிரசாத் செயல்பட்டு வருகிறார். இவரைத் தொடர்ந்து, தற்போது இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனராக ஸ்ரீராம் சுப்ரமணியம் உள்ளார். கீரைகளை ஆன்ட்ராய் மற்றும் ஐ-போன்களில் பிளே ஸ்டோர் வழியாக செயலிகளை பெற்று ஆர்டர்களை மேற்கொள்ளலாம்.

இருகூர், தொண்டாமுத்துார், சித்ரா, பாப்பம்பட்டி, மலுமிச்சம்பட்டி, வீரியம்பாளையம், கோபி, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் பொள்ளாச்சியிலிருந்து எவ்வித இடைத்தரகர்களும் இல்லாமல் நேரடியாக கீரைகள் பெறப்படுகின்றன. 2 மணி நேரம் முதல் 4 மணி நேரத்துக்குள் பறிக்கப்பட்ட கீரைகளை வாடிக்கையாளர்களுக்குப் புத்தம் புதியதாக வழங்கப்படுகிறது. 

தற்போது 25 முன்னணி அப்பார்மென்ட்டுகளில் காலை நேரங்களில் கீரை விற்பனையை தொடங்கியுள்ளனர். முதலில் ஆன்லைன் மூலம் தொடங்கப்பட்ட இந்த விற்பனை, கடந்த ஆண்டு டிசம்பரில் விற்பனையகத்தை தொடங்கினர். அதில், சூப் மற்றும் உணவு வகைகள் கடந்த மார்ச் மாதம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், கீரைக்கடை.காமின் புதிய முயற்சியாக, கோவையில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கீரைகள் கிடைக்கும் வகையில் மினி ஸ்டோர் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கீரை வகைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்பனையை துவக்கியுள்ளதோடு, நீலகிரி சூப்பர் மார்க்கெட்டுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த மினி ஸ்டோர், காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் செயல்படும்.



'கீரைக்கடை.காம்' ஸ்ரீராம் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளதாவது :- மினி ஸ்டோரில் பணியாற்றவும் குறைந்த அளவில் முதலீடு செய்யவும் ஒய்வு பெற்றோர் மற்றும் இளைஞர்களுக்கு வணிக வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாதந்தோறும் ரூ. 20,000 முதல் ரூ. 40,000 வரை சம்பாதிக்க முடியும். ஆரோக்கியமான உணவை சமுதாயத்துக்கு அளிப்பதை பெருமையாகக் கருதுகிறோம். மேலும், நாங்கள் ஆன்லைன் மூலம் உணவு பொருட்களை சமுதாயத்துக்கு விற்பனை செய்யவும் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம். கீரைக்கடை செயலியை ஆன்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் பதிவிறக்கம் செய்து, கீரையை முன் கூட்டியே பதிவு செய்யலாம்.



இந்தியாவிலேயே முதல் முறையாக கீரை விற்பனைக்கு தனி கடையை தொடங்கியுள்ளோம். 40 வகையான கீரைகளை தற்போது விற்பனைக்கு வைத்துள்ளோம். விரைவில் இதை 100-க்கும் மேற்பட்ட வகைகளாக உயர்த்தி சாயிபாபா காலனியில் உள்ள கடையில் விற்பனைக்கு வைக்க உள்ளோம். கோவையில் ஒவ்வொரு பின்கோடு உள்ள இடங்களிலும் கீரை கடைகளை ஆறு மாதத்திலிருந்து ஓராண்டுக்குள் திறக்க உள்ளோம். 

பின்னர், இந்தத் திட்டத்தை சென்னை, பெங்களூரு மற்றும் பிற நகரங்களுக்கு மாற்ற உள்ளோம். வணிக மேம்பாட்டிற்காக முதலீட்டு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இறுதி செய்யப்பட்ட பின்னர் இது குறித்த விபரங்களை வெளியிடுவோம். கீரைக்கடை விற்பனைக்கு பின்கோடு வாரியாக விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களை வரவேற்கிறோம், என்றார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...