கோவை: கோவையில் நடைபாதையில் வியாபாரம் செய்து வருபவர்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் நடைபாதை வியாபாரிகள் மனு அளித்தனர்.

காந்திபுரம் பகுதியில் 125-க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகள் பல வருடங்களாக வியாபாரம் செய்து வந்தனர். மேம்பால பணிகள் துவங்கப்பட்டபோது அவர்களைக் காலி செய்யச் சொல்லி, மாற்று இடம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டாக்டர்.நஞ்சப்பா சலையில் 225 கடைகளும், பாரதியார் சாலையில் 85 கடைகளும், வின்செண்ட் சாலையில் 60 கடைகளும் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், நஞ்சப்பா சாலையில் மட்டும் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களுக்கு ஓதுக்கீடு செய்யாத காரணத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், "20 ஆண்டு காலமாக நஞ்சப்பா சலையில் 125 கடைகள் செயல்பட்டு வந்தது. மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்த வாடகையை செலுத்தி வந்துள்ளோம். 125 கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, சிவானந்த காலனி பவர் ஹவுஸ் பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை செலவு செய்யப்பட்ட கடைகளை காவல் துறையினரும், மின்வாரிய அதிகாரிகள் அகற்றி விட்டனர். மேலும், மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர வியாபாரம் செய்திடவும், ஏற்கனவே கடைகள் அமைத்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்திட வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.