பேரறிவாளன் உள்பட 7 பேரின் கருணை மனுக்களை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: கோவையில் டி.டி.வி., தினகரன் வலியுறுத்தல்

கோவை: பேரறிவாளன் உள்பட 7 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் மீண்டும் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என அ.ம.மு.க., துணை பொதுச்செயலாளர் டி.டி.வி., தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை: பேரறிவாளன் உள்பட 7 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் மீண்டும் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என அ.ம.மு.க., துணை பொதுச்செயலாளர் டி.டி.வி., தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி., தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- தமிழகத்தில் மக்கள் விரோத, அரக்கர்களின் ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு நேரில் சென்று மக்களிடம் பிரச்சினை குறித்துப் பேச வேண்டும். நேற்று மட்டும் மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைத்திருந்தால், 2 நாளில் இந்த ஆட்சி முடிவுக்கு வந்திருக்கும்.

தற்போது, இந்த அரசின் ஆயுட்காலம் கொஞ்சம் நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்து பொதுத்தேர்தல் நடைபெற்றால் மாபெரும் வெற்றி பெறுவோம்.

சோனியா, ராகுல், பிரியங்கா போன்றவர்களே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், பேரறிவாளன் உட்பட 7 பேரின் கருணை மனுவைப் பரிசீலனை செய்து குடியரசுத் தலைவர் விடுதலை செய்திருக்கலாம். மீண்டும் 7 பேரின் கருணை மனுவை ஒருமுறை பரிசீலனை செய்ய வேண்டும்.

18 எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பான வழக்கில் 3-வது நீதிபதியிடம் உள்ள வழக்கை வாபஸ் வாங்க மனு தாக்கல் செய்தால், மீண்டும் இடைத்தேர்தல் வரும், அப்போது, நம் பலத்தை நிரூபிப்போம் என்று தங்க தமிழ்ச்செல்வன் என்னிடம் கூறினார். அதற்கு சரி என்று அவருக்கு ஓப்புதல் கூறியுள்ளேன்.

மற்ற எம்.எல்.ஏ.,க்கள் நீதிமன்றம் மூலமே சட்ட நடவடிக்கை தொடரலாம் என தெரிவித்துள்ளேன். 3-வது நீதிபதி நியமிக்கப்பட்ட பின்னர், அவரிடம் தங்கத் தமிழ்ச்செல்வன் மனு தாக்கல் செய்வார்.

சேலம் - சென்னை 8 வழிச்சாலைத் திட்டங்களில் முதலமைச்சரின் உறவினர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கப்படுகிறது. இது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டால், அதனை முதலமைச்சர் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். 8 வழிச்சாலை விவகாரத்தில் சேலம் மக்களே எதிர்ப்பாகத்தான் உள்ளனர். ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன. முதலமைச்சருக்கு எதிராக சேலம் மக்கள் இருக்கின்றனர். காவல்துறையை வைத்துப் போராடுபவர்கள் கைது செய்யப்படுகின்றனர். தூத்துக்குடியில் இன்னும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அ.ம.மு.க., ஆட்சிக்கு வந்தால் மக்கள் விரும்பாத எந்த திட்டமும் நிறைவேற்றப்படாது. அம்மா வழியில் ஆட்சி எனக் கூறிக்கொண்டு கோமாளித்தனமாக பேசுகின்றனர். அமைச்சர் ஜெயக்குமாரிடம் என்னைச் சேர்த்துக்கொள்ளும்படி யார் கேட்டார்கள் எனத் தெரியவில்லை. யாருக்கோ பயந்துகொண்டு அவர்கள் செயல்படுகின்றனர். தமிழகம் முழுவதும் தேர்தல் வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம். மக்கள் ஆட்சியாளர்களைப் புறந்தள்ளிவிட்டனர். கூட்டம் போடக் காரணம் தேடிக் கூட்டம் போடுகின்றனர். ஆனால், மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். காவல்துறை உதவியுடன் அ.தி.மு.க.வினர் கூட்டம் நடத்துகின்றனர். காவல்துறை இல்லாமல் அ.தி.மு.க.,கூட்டம் எங்கும் நடக்கமுடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....