கோவை : வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வரும் சிறுத்தைப்புலி தாக்கியதில் இன்று மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.
கோவை : வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வரும் சிறுத்தைப்புலி தாக்கியதில் இன்று மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.
வால்பாறையை அடுத்த சின்கோனா எஸ்டேட், காஞ்சமலை எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைப்புலியின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த, சில மாதங்களுக்கு முன்பு குழந்தையின் தலையைத் துண்டித்துக் கொன்றது. அந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். மேலும், ஒரு சிறுத்தைப்புலி அதேப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை மீண்டும் அச்சுறுத்தி வந்தது.
இந்த நிலையில், சிறுத்தைப்புலி தாக்கியதில் இன்று மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.