நீலகிரி: கும்கி பயிற்சி பெறுவதற்காக கேரள மாநிலத்தில் இருந்து மூன்று யானைகள் தெப்பக்காடுக்கு அழைத்து வரப்பட்டுள்ளன.

கேரளா மாநிலம் முத்தங்கா யானைகள் காப்பகம், கோணி யானைகள் காப்பகம் மற்றும் கோடநாடு யானைகள் காப்பகத்தில் இருந்து சூரியன், நீலகண்டன், சுரேந்திரன் ஆகிய மூன்று வளர்ப்பு யானைகள் கும்கி பயிற்சி பெறுவதற்காக முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளன.

இந்த மூன்று யானைகளுக்கும் இன்று காலை முதல் கும்கி பயிற்சி அளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதுமலையில் பணியாற்றும் பயிற்சி பெற்ற யானை பாகன்கள், அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கவுள்ளனர்.

தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள ஐந்து கும்கி யானைகளை கொண்டு, இந்த மூன்று யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த யானைகளுக்கு மற்ற யானைகளை கட்டுப்படுத்தவும், பிரச்சனைக்குரிய யானைகளை லாரியில் ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.