கோவை: குறிச்சி குளத்திற்கு வரும் நீரை புட்டுவிக்கி அணையின் மதகுகள் கொண்டு தடுப்பதாக பரவும் வாட்ஸ்-ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
கோவை: குறிச்சி குளத்திற்கு வரும் நீரை புட்டுவிக்கி அணையின் மதகுகள் கொண்டு தடுப்பதாக பரவும் வாட்ஸ்-ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. தன்னார்வலர்கள் செய்த தூய்மைப் பணியின் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வற்றிக் கிடந்த நொய்யல் அன்னை, மழையின் காரணமாக கரைபுரண்டோடிய காட்சிகள் கோவை மக்களின் உள்ளத்தை குளிர்வித்தது.
இந்த சூழலில், குறிச்சி குளத்திற்கு நீர் வரத்து குறைவாக உள்ளதாகவும், அந்த குளத்திற்கு வரும் நீரை சிலர், புட்டுவிக்கி தடுப்பணையில் உள்ள மதகுகளை அடைத்து தடுப்பதாகவும் வாட்ஸ்-ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வந்தது.

ஆனால், அந்த செய்தி தவறானது என்றும், குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வரத்து உள்ளது என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.