கோவை: கனமழை மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததன் காரணமாக தொடர்ந்து ஆறாவது நாளாக கோவை குற்றாலத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை குற்றாலம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மழையுடன் சூறைக்காற்று வீசி வருவதால் குற்றாலம் செல்லும் பாதையில் அவ்வப்போது மரங்கள் விழுவது வாடிக்கையாகி வருகிறது. அவ்வாறு விழுந்த மரங்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காரணங்களால் கடந்த சனிக்கிழமை அன்று குற்றாலத்திற்கு விடுமுறை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விடுமுறை அடுத்தடுத்த நாட்களுக்கும் நீடித்தது.
இந்த சூழலில், கோவை குற்றாலம் ஆறாவது நாளாக இன்றும் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.