கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்த உறுதி மொழியை 300-க்கும் மேற்பட்டோர் எடுத்துக் கொண்டனர்.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்த உறுதி மொழியை 300-க்கும் மேற்பட்டோர் எடுத்துக் கொண்டனர். 

குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு பிளக்ஸ் போர்டு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் திறந்து வைத்தார். மேலும், குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வாகனங்களில் பொருத்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அவர் தொடங்கி வைத்தார். 

பின்னர், மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கில் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி பயின்று முறை சார்ந்த பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 7 மாணவ, மாணவிகளுக்கு சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ. 17,000 கல்வித் தொகைக்கான காசோலை, கல்வி உபகரணங்கள் மற்றும் ரெடிமேடு ஆடைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கிப் பாராட்டினார்.

குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து தற்போது பட்டப்படிப்பு முடித்த 15 பேருக்கு 'இளம் சாதனையாளர் விருது" சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கி ஊக்குவித்தார். மேலும், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களுக்கு போர்டு கார் நிறுவனம் மற்றும் ஹெல்பிங் மைன்ட்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்ட கணினிகள் மற்றும் உலக உருண்டைஉள்ளிட்டவைகளை சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர்களுக்கு அவர் வழங்கினார். 

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...