நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட இருந்த ரமலான் பண்டிகை, பிறை தென்படாததால் நாளை மறுதினம் (ஜுன் 16) கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஹயூப் அறிவித்துள்ளார்.

ரமலான் நோன்பு ஆரம்பித்து இன்றுடன் ஒரு மாதம் ஆன நிலையில், பிறை தெரிந்தவுடன் இரமலான் கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். இதனால், ரமலான் விடுமுறை நாளையா..? அல்லது நாளை மறுதினமா..? என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், ரமலான் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிறை தென்படாததால் நாளை மறுதினம் (ஜுன் 16) ரமலான் பண்டிகைக் கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஹயூப் அறிவித்துள்ளார். இதனால், நாளை அறிவிக்கப்பட்டிருந்த பொதுவிடுமுறை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல, நாளை செயல்படும். சனிக்கிழமை பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவை ஹிலால் கமிட்டியின் சார்பில் ஷவ்வால் பிறை பார்த்து நோன்பு பெருநாள் முடிவு செய்யும் கூட்டம், ஷம்சுல் இஸ்லாம் ஹனஃபி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் M.A. இஸ்மத் தலைமையில் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தில் எங்கும் ஷவ்வால் பிறை தென்படாததால் நாளை ரமலான் பிறை 30-ஆக பூர்த்தி செய்து, நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஷவ்வால் பிறை 1 என்றும் நோன்பு பெருநாள் என்றும் முடிவு செய்யப்பட்டது.