கோவை : மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 55 வயது முதியவர் படுகாயமடைந்தார்.

நெல்லித்துரை பகுதி பூதப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜே. சின்னன் (55). இவர் இன்று மதியம் 2.15 மணியளவில் வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை சின்னனை பயங்கரமாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்து சென்றது. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காட்டு யானை தாக்கியதில், கிராமவாசி ஒருவர் படுகாயம் அடைந்தது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.