18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுபட்டக் கருத்து: 3-வது நீதிபதிக்கு வழக்கு மாற்றம்

டி.டி.வி., தினகரனின் ஆதரவு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இருநீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரித்துள்ளதால், 3-வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

டி.டி.வி., தினகரனின் ஆதரவு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இருநீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரித்துள்ளதால், 3-வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டி.டி.வி., தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, புகராளித்த 19 எம்.எல்.ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் நேரில் ஆஜராகி விளக்கமளித்த நிலையில், மற்றவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார்.



இந்தத் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எம்.துரைசாமி, உயர் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகள் காலியாக இருப்பதாகவோ, அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்போ வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் பல மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கைத் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை பதவி நீக்கம் செய்த வழக்கில் இருநீதிபதிகளும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதாவது, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பிறப்பித்த உத்தரவில், '18 எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கம் செல்லும். அதன்படி, 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவித்து, தேர்தலை நடத்தலாம்," எனக் கூறினார். இதனிடையே, மற்றொரு நீதிபதியான சுந்தர், "18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது." என அறிவித்துள்ளார். இதனால், கடந்த 20.09.2017 அன்று நீதிபதி துரைசாமியின் இடைக்கால உத்தரவு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இருநீதிபதிகளின் கருத்துக்கள் மாறுபட்டிருப்பதால், 3வது நீதிபதியிடம் இந்த வழக்கு கொண்டு செல்லப்படுகிறது. 3-வது நீதிபதியின் முடிவைப் பொறுத்து, பெரும்பான்மை அடிப்படையில் வழக்கின் தீர்ப்பு அமையும். எனவே, 3-வது நீதிபதி விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...