குன்னூரில் அரசு பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஆறு பேர் உயிரிழப்பு

கோவை: குன்னூர் அருகே அரசு பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் பலியாகினர்.



கோவை: குன்னூர் அருகே அரசு பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் பலியாகினர்.



ஊட்டியில் இருந்து 12 பெண்கள் உட்பட 34 பயணிகளுடன் குன்னூரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து மதாடா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 28 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திகற்கு சென்ற கேத்தி போலீசார், மீட்புப் பணியில் ஈடுபட்டு படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆறு பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் நீலகிரியில் பெரும் பரபரப்பை உண்டாகியது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....