மோடியின் ஃபிட்னஸ் வீடியோவை கலாய்த்து வைரலாகும் டிரோல் வீடியோக்கள்..!

சமூக வலைதளங்களில் தனது ஃபிட்னஸ் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவை கலாய்த்து, நெட்டின்சன் பல டிரோல் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் தனது ஃபிட்னஸ் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவை கலாய்த்து, நெட்டின்சன் பல டிரோல் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ரத்தோரின் ஃபிட்னஸ் சவாலை ஏற்ற கிரிக்கெட் வீரர் கோலி, தனது உடற்பயிற்சி வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அப்போது, பிரதமர் மோடி, முன்னாள் கேப்டன் தோனி மற்றும் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கும் இந்த சவாலை கோலி விடுத்தார். கோலியின் இந்த சவாலை ஏற்பதாகக் கூறிய பிரதமர் மோடி, விரைவில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோவை வெளியிடுவதாகக் கூறியிருந்தார். 

இந்த நிலையில், இன்று காலை சுமார் 1 நிமிடம் 49 நொடிகள் அடங்கிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த வீடியோ வெளியானதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், இந்த வீடியோ தற்போது தேவையானதா..? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இது போன்ற விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், நெட்டின்சன்கள் பிரதமர் மோடியின் வீடியோவைக் கலாய்த்து டிரோல் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சுவாமி பாடல்கள், திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள இசை மற்றும் வீடியோ கேம்களில் உள்ள மியூசிக் போன்றவற்றை அந்த வீடியோவுடன் பொருத்தி தெறிக்க விட்டுள்ளனர். அதனை தற்போது, இங்கு காணலாம்..

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....