கோவை - மஸ்கட் இடையே விமானசேவையை தொடங்குகிறது ஓமன் ஏர்ஸ்?

கோவை : கோவை - மஸ்கட் இடையே விமான சேவையை தொடங்க இருப்பதாக ஓமன் ஏர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


கோவை : கோவை - மஸ்கட் இடையே விமான சேவையை தொடங்க இருப்பதாக ஓமன் ஏர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

மஸ்கட்டில் இருந்து ஆப்ரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் விமான சேவைகளை அதிகரிக்க ஓமன் ஏர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, இந்தியாவிற்கு இயக்கப்படும் விமானங்களில் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மஸ்கட்டில் இருந்து கோவைக்கு விமானத்தை இயக்க ஓமன் ஏர்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது தொடர்பாக ஓமன் ஏர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அளித்த பேட்டியில், "எங்களது நிறுவனம் இந்தியாவிற்கான சேவையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதாவது, இந்தியாவிற்கு 27,000 இருக்கைகளாக இருக்கும் தங்களது சேவையை 60,000 இருக்கைகளாக அதிகரிக்க உள்ளோம். அதன்படி, மஸ்கட்டில் இருந்து மங்களூரூ, கோவை மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளோம். இந்த சேவையில், ஏ-330எஸ் ரக மற்றும் டிரீம்லைனர்ஸ் போன்ற விமானங்களை இயக்கப்படும்." என்றார். 

கோவைக்கு சர்வதேச விமானங்களை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கோவை-மஸ்கட் இடையிலான விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற கொங்கு மாவட்ட மக்களுக்கு நல்ல பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...