கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தொடர் வெள்ளப் பெருக்கால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியதை அடுத்து கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பவானி ஆற்றில் அணையின் உபரி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த நான்கு நாட்களாக அணைக்கான நீர் வரத்து அதிகரித்து கொண்டே இருந்த நிலையில், நேற்று இரவு 25 ஆயிரம் கன அடி தண்ணீரானது பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக பவானி ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளியேற்றப்படும் உபரி நீரானது பவானி சாகர் அணையை அடைவதால் பவானி சாகர் அணையின் நீர் மட்டமும் விறு- விறுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையில் இருந்து பத்தாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வாழை
வெள்ளப் பெருக்கு காரணமாக பவானி சாகர் அணையின் நீர் தேக்க பகுதிகள் மற்றும் கரையோரம் உள்ள லிங்காபுரம், காந்தவயல் போன்ற பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த பகுதிகளில் ஆற்றின் நீரோட்டம் அதிகமானதால், கரையோரத்தில் பயிர் செய்யப்பட்டிருந்த சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தற்போது தண்ணீரில் மூழ்கி உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விவசாயத்திற்கு தண்ணீரின்றி அவதிப்பட்டு வந்த விவசாயிகள் கடன் பெற்று தற்போது உற்பத்தி செய்து வந்த வாழை பயிரும் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும், பவானி சாகர் அணையின் நீர் தேக்க பகுதிகளில் பிரதானமாக விளைவிக்கப்படும் வாழை விவசாயம் இவ்வாண்டு 20 லட்சத்திற்கும் மேலாக இருப்பதால் பவானி ஆற்றில் நீர் வரத்தானது இதே நிலை நீடித்தால் அனைத்து வாழைகளும் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்படும் என்பதால் விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது.