வேகமாக நிரம்புகிறது சோலையாறு அணை

வால்பாறை: தொடர் கன மழை காரணமாக வால்பாறையில் உள்ள சோலையாறு அணை 114 அடியாக உயர்ந்துள்ளது.


வால்பாறை: தொடர் கன மழை காரணமாக வால்பாறையில் உள்ள சோலையாறு அணை 114 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

வால்பாறையை பொறுத்த வரையில், இன்று காலை நிலவரப்படி சின்னகல்லாரில் 103 மி.மீ மழையும், நீரார் அணை பகுதியில் 86 மி.மீ மழையும், வால்பாறையில் 64 மி.மீ மழையும், சோலையார் அணை பகுதியில் 108 மி.மீ மழையும் கொட்டித்தீர்த்தது.



இதன் காரணமாக ஆறுகள் சிற்றோடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சோலையார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால், அணை நீர் மட்டம் உயர்ந்து தற்போது 114 அடியாக உள்ளது.

தொடர்ந்து இதே போல் மழை பெய்தால் இன்னும் சில நாட்களில் சோலையார் அணை தனது முழு கொள்ளளவான 160 அடியை எட்டும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சராசரியாக 26.07 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான 55 அடியில், தற்போது 38 அடி வரை நீர் இருப்பு உள்ளது. பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில், தற்போது 97 அடி வரை நீர் இருப்பு உள்ளது. ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில், தற்போது 59.40 அடி வரை நீர் இருப்பு உள்ளது.



நீலகிரி மாவட்ட அணைகளை பொறுத்தவரையில், எமரால்டு அணையின் மொத்த கொள்ளளவான 184 அடியில் தற்போது 128 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. முக்கூர்த்தி அணையின் மொத்த கொள்ளளவான 18 அடியில் தற்போது 14 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. பைக்காரா அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் தற்போது 84 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. சாண்டிநல்லா அணையின் மொத்த கொள்ளளவான 49 அடியில் தற்போது 40 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.



கிளன்மார்கன் அணையின் மொத்த கொள்ளளவான 33 அடியில் தற்போது 26.5 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. மாயார் அணையின் மொத்த கொள்ளளவான 17 அடியில் தற்போது 15 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. பார்சன்ஸ் வேலி அணையின் மொத்த கொள்ளளவான 58 அடியில் தற்போது 50 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. போர்திமந்து அணையின் மொத்த கொள்ளளவான 130 அடியில் தற்போது 114 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அவலாஞ்சி அணையின் மொத்த கொள்ளளவான 171 அடியில் தற்போது 132 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

அப்பர் பவானி அணையின் மொத்த கொள்ளளவான 210 அடியில் தற்போது 128 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. குந்தா அணையின் மொத்த கொள்ளளவான 89 அடியில் தற்போது 88.5 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. கெத்தை அணையின் மொத்த கொள்ளளவான 156 அடியில் தற்போது 154 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

Newsletter

உலக இரத்த தான தினம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் இரத்த தானம்

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சனிக்கிழமை இரத்த தான முகாம் நடைபெ...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி, சேலத்தில் கைது..!

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்குக் கைதி பிம்முடு அஜித்குமார்,...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...