கோவையில் சிறைக் கைதி மரணம்

கோவை: கோவை மத்திய சிறையில் சின்னக்காளை என்ற கைதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.



கோவை: கோவை மத்திய சிறையில் சின்னக்காளை என்ற கைதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

கடந்த 2007-ல் நடந்த கொலை வழக்கில் சின்னக்காளை என்பவர் கைதாகி ஆயுள் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய்கள் இருந்தன.

இந்த நிலையில், நேற்று இரவு சின்னக்காளைக்கு உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, அவரை சிறைக் காவலர்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே இறந்து விட்டார்.

அவரது இறப்பை உறுதி செய்த மருத்துவர்கள், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....