கோவை : பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரம் தருவதாகக் கூறி மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீட்டையும் வழங்கக் கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலை செய்ய முடிவு செய்தார். இதற்காக, கோவை பாப்பநாயகன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஏ.ஜி.எஸ்., டிரேடர்ஸ் என்ற பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரம் விற்பனை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வராஜுவை அணுகியுள்ளார். அவரிடம் இரு இயந்திரம் வாங்க ரூ. 13.65 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார்.
ஆனால், பணம் கொடுத்தும் நீண்ட நாட்களாகியும், இயந்திரம் தராமல் மோசடி செய்ததால் கடந்த 2016-ல் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் நாகராஜன் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு கோவை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இயந்திரத்தை அளிக்காமல் மோசடியில் ஈடுபட்ட செல்வராஜுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 12.4 லட்சம் தொகையுடன் 9% வட்டியுடன் இழப்பீடு வழங்க நீதிபதி வேலுச்சாமி உத்தரவிட்டுள்ளார்.