அவினாசி மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட சிறிய கனரக வாகனம்

கோவை : கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் சிறிய ரக கனரக வாகனம் சிக்கி கொண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை : கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் சிறிய ரக கனரக வாகனம் சிக்கி கொண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை .- அவினாசி நெடுஞ்சாலையானது, உப்பிலிபாளையம் மேம்பாலம் வழியாகத் தான் தொடங்குகிறது. பாலத்திற்கு அடியில் இருசக்கர வாகனங்கள், கார்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால், இந்தப் பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தடையை மீறி அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று ரயில்கள் செல்லும் பாலத்தின் அடியே வாகனத்தின் மேற்கூரை சிக்கியது. 

இதனால், வாகனத்தை நகர்த்த முடியாத சூழல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவ்வழியாக போக்குவரத்து தடை செய்தனர். பிறகு, வாகனத்தின் மேற்பகுதி பாலத்தில் சிக்கியதால், உடனடியாக வெல்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி வாகனத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், நீண்ட முயற்சிக்குப் பிறகு, வாகனத்தின் பகுதியை மேம்பாலத்தில் இருந்து அகற்றினர். இதைத் தொடர்ந்து, அந்த வழியான போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....