கோவை: கோவை மாவட்டம் கணபதி அருகே தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த மருமகனை கத்தியால் குத்திக் கொலை செய்த மாமனாரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் குணவேல். இவர் 3 மாதங்களுக்கு ஒரு முறை, கணபதி காவல்துறையினரின் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இவர் வீட்டிற்கு வரும் போதெல்லாம் மனைவி சாராதாவுடம் தகராறில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாமனார் தியாகராஜன், மருமகன் குணவேலை கழுத்து மற்றும் மார்பு போன்ற பகுதிகளில் சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதில், தப்பியோடிய தியாகராஜனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.