கனமழையால் நிரம்பியது மேட்டுப்பாளையம் பில்லூர் அணை: விடுக்கப்பட்டது வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்: தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தபடி இருந்தது.

நேற்றிரவு அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு ஆறாயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு பன்னிரெண்டாயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் மொத்தம் 100 அடி நீர்மட்ட உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் தற்போது 98 அடியை கடந்தது. 

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் நான்கு மதகுகளும் திறந்து விடப்பட்டது. அணையின் நான்கு மதகுகள் வழியாக தற்போது வினாடிக்கு ஒன்பதாயிரம் கன அடி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானியாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



அணையின் தற்போதைய நீர்வரத்தான ஒன்பதாயிரம் கன அடி நீர் அப்படியே பவானியாற்றில் திறந்து விடப்பட்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் முதல் சிறுமுகை வரையிலான ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என்று மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் அறிவுறுத்தியுள்ளார்.



பில்லூர் அணையின் உபரி நீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் இதன் கிளையாறுகளான கல்லாறு, காந்தையாறு போன்ற காட்டாறுகளிலும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...