கோவை: தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் கோவை குற்றாலத்தில் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை குற்றாலம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக குற்றாலம் செல்லும் சாலையில் மரங்கள் விழுந்தன. இதனைத் தொடர்ந்து, அங்கு அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக நீர்வரத்து அதிகமாக இருப்பதாகக் கூறி நேற்று கோவை குற்றாலம் மூடப்பட்டது. இந்த நிலையில், இன்றும் கோவை குற்றாலம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.