கோவை: கோவையில் மாவட்ட வனப்பகுதிகளில் நேற்று கடும் மழை பொழிவு இருந்த போதிலும் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் புலிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று காலை 6.30 மணிக்கு கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதில் பணியாளர்கள் குழுக்களாக பிரிந்தனர். அவர்கள் இரண்டு கிலோ மீட்டர் இடைவெளியில் தங்களது பணியினை தொடர்ந்தனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஜி.பி.எஸ்., கருவி மூலம் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று மற்றும் நாளை ஊனுண்ணிகளின் கணக்கெடுப்பில் அவர்கள் ஈடுபடுவார்கள். இதில் புலி, சிறுத்தை, கரடி மற்றும் காட்டு நாய் ஆகிய விலங்குகள் அடக்கம்.

சரியான எண்ணிக்கையைப் பெறுவதற்காக காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவையில் உள்ள ஏழு வனச் சரகங்களிலும் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகின்றது." என்றனர்.
வனப்பகுதிகளில் நேற்று கடுமையான மழைப் பொழிவு இருந்த போதிலும், கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.