தனியார் தொலைக்காட்சியின் விவாத மேடை நிகழ்ச்சியில் பா.ஜ.க வினர் ரகளை

கோவையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின் போது தகராறு ஏற்பட்டதால் நடிகர் அமீர் பாதியில் வெளியேறினார்.


கோவை: கோவையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின் போது தகராறு ஏற்பட்டதால் நடிகர் அமீர் பாதியில் வெளியேறினார். 

கோவை - அவினாசி சாலையில் உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் (புதிய தலைமுறை) சார்பில் விவாதமேடை என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், அ.தி.மு.க., பிரமுகர் செம்மலை, தி.மு.க.,வைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன், கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, செ.கு.தமிழரசு மற்றும் நடிகர் அமீர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் அமீர் பேசும் போது, “தூத்துக்குடி துப்பாக்கிச்சுடு சம்பவம் இனக்கலவரம் என பலர் கூறுகின்றனர். அப்படியென்றால், கோவையில் நடைபெற்ற கலவரத்தை என்ன என்று சொல்வது..?,” இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். அவரது, இந்தப் பேச்சைத் தொடர்ந்து, பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்த சிலர் ரகளையில் ஈடுபட்டனர். 

இதனால், நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ., தனியரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பலாகிருஷ்ணன் ஆகியோர் நடிகர் அமீரை நிகழ்ச்சியில் இருந்து பத்திரமாக வெளியே அழைத்துச் சென்றனர். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட முன்கூட்டியே நிகழ்ச்சி முடிக்கப்பட்டது.

இதனிடையே, நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய அமீர், எம்.எல்.ஏ., தனியரசு மற்றும் கே. பாலகிருஷ்ணன் சென்ற காரை, கனியூர் சுங்கச்சாவடி அருகே சில மர்ம நபர்கள் வழிமறித்து தாக்குதல் நடத்தியதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...