கோவை: விஷம் கலந்த பிரியாணியை மர்ம நபர்கள் சிலர் நாய்களுக்கு கொடுத்ததில் 15 நாய்கள் உயிரிழந்தன.

வடவள்ளியை அடுத்த நவாவூர் பிரிவில் உயிரிழந்த ஐந்து நாய்களின் உடலுக்கு தீ வைக்கப்பட்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். அந்த பகுதியில், இது போன்று கடந்த சில நாட்களில் மட்டும் 15 நாய்கள் உயிரிழந்ததாகவும், அவை எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷத்தை கொடுத்தவர்கள் அதற்கான தடயங்களை அழிப்பதற்காவே நாய்களின் உடல்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றும் ஒருவர் கூறுகையில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நபர் நாய்களுக்கு பிரியாணியை வழங்குவதைப் பார்த்தேன். வழங்கியது போக மீதமுள்ள பிரியாணியை அவர் எரித்துவிட்டுச் சென்றார்.

நாய்களுக்கு சாப்பிட்டது போக மீதமிருந்த உணவை சுவைத்த காகங்களும் அடுத்தடுத்து உயிரிழந்தன." என்றார். இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.