பரதம் உள்ளிட்ட கலைப் போட்டிகளின் பிரிவுகளில் 'தமிழ்நாடு பொன்விழா ஆண்டு' கொண்டாட்டம்

கோவை: கோவை மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலைபோட்டிகள் பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புற நடன பிரிவுகளில் தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.

கோவை: கோவை மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலைபோட்டிகள் பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புற நடன பிரிவுகளில் தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.



இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி பொன்விழா ஆண்டாக இவ்வாண்டு தமிழ்நாடு அரசால் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்மொழி மற்றும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் கலை, விளையாட்டு, கட்டுரை கவிதை, பேச்சு போட்டிகள் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நடத்தப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பாக கலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டியில், தமிழிசை பாட்டுப்போட்டி, பரதநாட்டியம் (பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்) நாட்டுப்புற நடனம் ஆகிய பிரிவுகளில் கோவையில் நடத்தப்பட உள்ளது. 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2000 வழங்கப்பட உள்ளது.

இம்மூன்று பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அரசின் செலவில் அனுப்பப்படுவர். மாநில போட்டியில் வெற்றி பெறுவர்களுக்கு முதல் பரிசு ரூ. 50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.10,000 மற்றும் இம்மூன்று பரிசு பெறுபவர்களுக்கும் தங்கப்பதக்கம் 4 கிராமில் வழங்கப்படும். தமிழிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விவரங்களை மண்டல உதவி இயக்குநர், மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை (அரசு இசைக்கல்லூரி வளாகம்) செட்டிப்பாளையம் பிரிவு சாலை, மலுமிச்சம் பட்டி, கோயம்புத்தூர் - 641050 என்ற முகவரிக்கு வரும் 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

போட்டி நடைபெறும் நாள் இடம் ஆகிய விவரங்களைப் போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத்துறையின் அலுவலகத்தை 0422-2610290 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...