கோவை: மதுக்கரை அருகில் பாலக்காடு நெடுஞ்சாலையில், கேரளத்தில் இருந்து வந்த ஒரு கார் லாரியில் மோதி, சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டு அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த இளைஞரை மீட்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

அதேநேரத்தில் அந்த வழியாக வந்த ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, மற்றும் அக்கட்சி தொண்டர்கள் அந்த இளைஞரை ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு உதவினர். மேலும், அரசு மருத்துவமனை இயக்குநரிடம் வைகோ அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, விபத்து குறித்த தகவலைச் சொல்லி, அந்த இளைஞருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
தற்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.