கோவை: கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் 3 நாட்கள் நடக்கும் புலிகள் கணக்கெடுப்பு பணி வரும் 8-ம் தேதி தொடங்கவுள்ளது.

கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட வனப் பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, புள்ளிமான், கடமான் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வசிக்கின்றன. வனப்பகுதியில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு இருமுறை வனத்துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், புலிகள் கணக்கெடுக்கும் பணி நாளை மறுநாள் தொடங்க இருக்கிறது. 10-ம் தேதி வரை என 3 நாட்கள் நடக்கும் இப்பணியில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட வனத்துறையினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என ஈடுபட உள்ளனர். புலிகளின் கால்தடத்தைக் கொண்டு அதன் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.