பெண் சுதந்திரத்தை வலியுறுத்தி 3,000 கி.மீ., தூரம் பெண்ணின் இருசக்கர சாகச வாகனப் பயணம் : உதகையில் தொடக்கம்

நீலகிரி: இயற்கையை பாதுகாக்கவும், பெண்களுக்கு சுதந்திரத்தை வலியுறுத்தியும் இருசக்கர வாகனத்தில் நின்றபடியே சுமார் 3 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணத்தை பெண் ஒருவர் உதகையில் தொடங்கினார்.

நீலகிரி: இயற்கையை பாதுகாக்கவும், பெண்களுக்கு சுதந்திரத்தை வலியுறுத்தியும் இருசக்கர வாகனத்தில் நின்றபடியே சுமார் 3 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணத்தை பெண் ஒருவர் உதகையில் தொடங்கினார். 

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவரும், தற்போது அன்னூர் பகுதியில் வசித்து வருபவர் சைபி. இவர், இருசக்கர வாகனத்தில் 5 மணி நேரத்தில் 250 கி.மீ. தூரத்தை நின்ற படியே இயக்கி சாதனை படைத்துள்ளார். இவர், தற்போது இயற்கையை பாதுகாக்கவும், மரங்களை நடவு செய்யவும், பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கவும், பெண் சுதந்திரம் என்பதை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் நின்றபடியே சுமார் 3 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்கள் வழியாக சென்று சென்னையில் பயணத்தை முடிக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று உதகை சேரிங்கிராஸ் பகுதியில் சைபி, தனது விழிப்புணர்வு வாகனப் பயணத்தை தொடங்கினார். 

முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற இருவர் பயணத்தை துவக்க வேண்டும். ஆனால், தற்போது நான் மட்டும் செல்ல இருப்பதால் கின்னஸ் புத்தகத்திற்கு விண்ணப்பிக்கவில்லை. வரும் காலங்களில் எனக்கு சவாலாக யாராவது வந்தால், அப்போது கின்னஸ் புத்தகத்திற்கு விண்ணப்பிக்க உள்ளேன். தற்போது நான் இருசக்கர வாகனத்தில் சாகச பயணங்களை மேற்கொண்டு வருவதைக் கண்டு பல பெண்கள், தற்போது இருசக்கர சாகச பயணப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவலை தனக்கு செல்போன் மூலம் தெரிவித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்றார். 

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...