குற்றவாளிகளை பிடிக்க சென்ற கோவை போலீசுக்கு கத்திக் குத்து

கோவை: திருட்டு வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க பழனிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக் குத்து விழுந்தது.



கோவை: திருட்டு வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க பழனிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக் குத்து விழுந்தது. 

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கரை கே.ஜி.காலனியில் நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பழனியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பேரூர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கபாண்டி தலைமையில் காவலர்கள் அந்த கொள்ளையர்களை பிடிக்க பழனி சென்றனர். 

அப்போது, கொள்ளை வழக்கில் தொடர்புடைய விக்னேஷ் மற்றும் ஆசிக் அகமது ஆகிய இருவர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றனர். மேலும், போலீசாரை அவர்கள் கத்தியால் தாக்கினர். இந்த தாக்குதலில் பேரூர் உதவி காவல் ஆய்வாளர் ஆறுமுக நயினாருக்கு கழுத்து பகுதியில் பலத்த வெட்டுப்பட்டது.



இந்த நிலையில், அவருக்கு பழனியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கே.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இதனைத் தொடர்ந்து, சிகிச்சை பெற்று வரும் ஆறுமுக நயினார்-ஐ இன்று மருத்துவமனையில் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பா.மூர்த்தி, காயமடைந்தவருக்கு ஆறுதல் கூறியதோடு, குற்றவாளிகளைப் பிடிப்பதில் துரிதமாக செயல்பட்ட தனிப்படைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.


Video: Laxman

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....