திருப்பூர்: திருப்பூரில் ரூ.20 ஆயிரம் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து 1-ம் வகுப்பு மாணவன் தந்தையுடன் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் தனது மகன் காந்திஜியை அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கட்டாய இலவச கல்விச் சட்டத்தின்கீழ் சேர்த்துள்ளார். இந்தாண்டு 1-ம் வகுப்பு பயிலும் அந்த மாணவனை இன்று பள்ளி நிர்வாகம் கல்விக்கட்டனம் செலுத்தவில்லை எனக் கூறி வெளியே அனுப்பியுள்ளது. இதனையறிந்து கேட்க வந்த தந்தையின் இருசக்கர வாகனத்தின் சாவியையும் பள்ளி நிர்வாகம் பிடுங்கி வைத்துள்ளது. இதனால், மனமுடைந்த மாணவனும், அவனது தந்தையும் பள்ளிக்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவன் காந்திஜி எழுது பலகையில் பள்ளிக்கு உள்ளே விடுங்க என்ற வாசகத்தை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி சாந்தியிடம் கேட்டபோது, 'கல்விக்கட்டணம் மட்டுமே அரசு செலுத்தும். பள்ளி விதிமுறைகளின்படி பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்,' எனத் தெரிவித்தார்.
திருப்பூரில் கட்டாய இலவச கல்விச்சட்டம் முறையாக தனியார் பள்ளிகள் கடைபிடிப்பதில்லை. இதனை மாவட்ட கல்வித்துறை கண்டு கொள்வதில்லை என பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பழனிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.