தூத்துக்குடி மற்றும் காவிரி விவகாரங்களில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் நடவடிக்கைகளை முன் வைத்ததால், அவர் நடித்த காலா படத்தை மக்கள் புறக்கணித்திருப்பதாக தெரிகிறது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'காலா'
வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் மும்பை தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்த படம் நாளை மறுதினம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. தற்போதுள்ள அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு அந்தப் படம் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்தப் படத்தை ரசிகர்கள் உள்பட அனைவரும் மிகவும் எதிர்பார்த்து இருந்தனர்.
காவிரிக்கு குரல் கொடுத்தால் வந்த வினை:
இந்த நிலையில், காவிரி விவகாரம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்களுக்கு கர்நாடக அமைப்புகள் சில கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, கர்நாடகாவில் பட ரிலீசை தடை செய்து அம்மாநில திரைப்பட வர்த்தக சபை உத்தரவிட்டது. இதனை நீக்க படக்குழு மற்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்டாலும் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இதனிடையே, நடிகரும், காலா படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் கர்நாடகத்தில் காலா படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஆணையிட வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
கை கொடுக்காத தூத்துக்குடி விசிட்:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்து நிதியுதவியும் வழங்கினார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர், என்றார். ரஜினியின் இந்தக் கருத்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், ரஜினிகாந்த் தூத்துக்குடி போராட்டத்தை கொச்சைப்படுத்தியதாக பலரும் குற்றம்சாட்டி அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காலா படத்தின் விளம்பரத்திற்காகவே அவர் தூத்துக்குடி சென்றதாகவும் குற்றம்சாட்டி வந்தனர்.
வரவேற்பில்லாத காலா :-
தூத்துக்குடி விவகாரத்தில் ரஜினியின் கருத்து தமிழக மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தற்போது வெளியாக இருக்கும் காலா படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வெளிவந்தன. அதன்படி, தமிழகம் முழுவதும் படத்தை புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு எதிராக தமிழர்கள் தீர்மானம் நிறைவேற்றயுள்ளனர். இதேபோல, கர்நாடகாவிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், படக்குழுவினர் அதிருப்தியடைந்துள்ளனர்.
காற்று வாங்கும் ஆன்லைன் டிக்கெட் பதிவு
சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு முதல்நாளில் டிக்கெட் கிடைப்பது என்பது எளிதான காரியமல்ல. முதல் ஒருவாரத்திற்கு டிக்கெட்டுகள் கிடைக்காது. அப்படி கிடைத்தாலும், அதிக ரூபாய்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படும். இந்த நிலையில், ரஜினியின் காலா படத்திற்கு இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், ஆன்லைன் டிக்கெட்டுக்கள் ஏதும் விற்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ரஜினியின் கருத்திற்கு, ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்பு தெரிவிப்பதைப் போல அமைந்துள்ளது.