லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி ஊழியர் கைது

கோவை: கட்டிட வரி விதிப்பு பெற லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கட்டிட வரி விதிப்பு பெற லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (வயது 35). அப்பகுதியில் 3 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் தொழில் கூடம் கட்டியிருந்தார். அங்கு மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழில் மையம் நடத்துவதாக திட்டமிட்டு, கட்டிட வரி விதிப்பு பெற மாநகராட்சியின் வடக்கு மண்டல அலுவலகத்தை அணுகினார்.

வடக்கு மண்டல உதவி வருவாய் அதிகாரி காளம்மாள், பில் கலெக்டர் மாலா (50) ஆகியோர் வரி விதிப்பு செய்வதற்கு சிவகுமாரிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டனர்.

இது குறித்து சிவக்குமார் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்படி, கடந்த வாரம் (சனிக்கிழமை) லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின் படி மாலாவிடம், ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மாலாவை கையும் களவுமாக கைது செய்தனர். உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் பணிக்கு வராததால், அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பினார்.

இந்நிலையில் தலைமறைவாகியுள்ள உதவி வருவாய் அதிகாரி காளம்மாள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பில் கலெக்டர் மாலாவை மாநகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. காளம்மாள் கைதாகாததால் அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட மாட்டார் என்றும் வழக்கு விசாரணைக்குப் பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...