உதகையில் பழங்குடியின நலத்துறை சார்பில் கண்காட்சி

நீலகிரி: இந்திய அரசின் பழங்குடியின நலத்துறை சார்பில், பழங்குடியினரின் கைவினை பொருட்கள் கண்காட்சி உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்று வருகிறது.

நீலகிரி: இந்திய அரசின் பழங்குடியின நலத்துறை சார்பில், பழங்குடியினரின் கைவினை பொருட்கள் கண்காட்சி உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்று வருகிறது.



கண்காட்சியில் இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ஐதராபாத், ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியினர்கள் தயாரித்த கைப்பைகள், ஓவியங்கள், உலோக பொருட்கள், பரிசுப்பொருட்கள், துணி வகைகள், அணிகலன்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.



ஐந்து வகை உலோக பொருட்களால் ஆன நந்தி, ஆமை, கதவு கைப்பிடி, பழங்குடியினர்களின் உருவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. மேலும், நீலகிரி மாவட்ட தோடர் இன மக்களின் எம்பிராய்டரி பொருட்களும் இடம் பெற்றுள்ளது.



இந்த கண்காட்சியில் வனத்துறை சார்பில் நீலகிரி தைலம், தேயிலைத்தூள், காட்டுத்தேன் வைக்கப்பட்டு உள்ளது. பழங்குடியினரின் கைவினை பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



கண்காட்சி வருகிற 10-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இலவசமாக கைவினை பொருட்களை பார்வையிடலாம்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....